வியாழன், 10 ஜூன், 2021

விசில் சத்தம்...

விசில் சத்தம்

சிலவேளைகளில்
பதட்டமுற
வைத்துவிடுகிறது,
காரிருளில்
தம் தடம்பதியாது
வயிற்றை
மேலும்கீழும் அழுத்தி
மெல்ல கடக்கும்
மண்புழுக்களுக்கு!
அவைகளுக்கு
இச்சிறு சத்தம்
தன்னிருப்பை
தன்னையுண்ணும்
கழுகுகளுக்கு
காண்பித்துவிடுமோ
என்றொரு
அச்சம்!
உண்மைதான்
அப்படியானதொரு
பெரு அச்சத்தில்
இவ்வாழ்வை
மண்புழுபோல்
நெளிந்து கடக்கும்
பலருள் நானும்
ஒருவன்!
சிலவேளைகளில்
கழுகை எதிர்க்க
துணியும் நான்
எவ்வேளையிலும்
விசில் சத்தத்தை
எதிர்கொள்ள
துணிவதில்லை!
அதற்காக நான்
என்றுமே
பயிற்றுவிக்கப்படுவதும்
இல்லை!
- சகா..
12/08/2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக